முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவ்வாய் கிரகத்திலும் அணுசக்தி பயன்படுத்தப்படும் அமெரிக்காவின் விபரீத ஆய்விற்கு வெற்றி

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

லாஸ் வேகாஸ்: சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப் முக்கியமான திட்டம் ஒன்றில் கையெழுத்து இட்டார். நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப போவதாக அவர் கூறினார். இந்த நிலையில் தற்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் நாசா திட்டமும் புதிய வடிவத்தை எடுத்து இருக்கிறது. பொதுவாக பூமியை விட்டு சென்ற பின் மனிதர்களுக்கு ஏற்படும் முதல் பிரச்சனை மின்சாரம். மனிதர்களின் எரிபொருள் தேவையை அங்கு பூர்த்தி செய்வது மிகவும் கடினம். தற்போது நாசா அமைப்பு அதற்கு பெரிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறது.

நாசாவின் முதல் நிலை சோதனை நவேடா மாகாணத்தில் நடந்தது. அணுசக்தி மூலம் விண்வெளியில் இருக்கும் பொருட்களை இயங்க வைக்க முயற்சி செய்தது. இதன் மூலம் செய்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய முடியும் என்று கூறப்பட்டது. இந்த முதல் கட்ட சோதனை ஓரளவுக்கு வெற்றியில் முடிந்தது.

அதன்பின் நாசா அமைப்பு இரண்டாம் கட்ட சோதனையையும் செய்தது. ரோபோட்டிக் மிஷன், சாட்டிலைட் என அனைத்து பொருள்களிலும் மின்சார தேவைக்கு அணு சக்தியை பயன்படுத்தும் முயற்சிகள் இதில் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க எந்த தவறும் இல்லாமல் நாசா அமைப்பால் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பின் நாசா அமைப்பு இரண்டாம் கட்ட சோதனையையும் செய்தது. ரோபோட்டிக் மிஷன், சாட்டிலைட் என அனைத்து பொருள்களிலும் மின்சார தேவைக்கு அணு சக்தியை பயன்படுத்தும் முயற்சிகள் இதில் செய்யப்பட்டது. இது முழுக்க முழுக்க எந்த தவறும் இல்லாமல் நாசா அமைப்பால் நடத்தி முடிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்காக யுரேனியம் 235 என்ற அணு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பேப்பர் பொட்டலம் அளவிற்கு இது தேவைப்படும் என்று நாசா குறிப்பிட்டு உள்ளது. இதை ஒன்றாக இணைய வைத்து அதன்மூலம் சக்தியை உருவாக்கி பொருட்களை இயங்க வைக்கலாம் என்று நாசா கண்டுபிடித்து இருக்கிறது.

இதற்காக தற்போது 'கிரஸ்டி' என்ற மாதிரி எந்திரம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை முழுமையாக வடிவமைத்த பின் எந்த கிரகத்திற்கும் செல்ல முடியும். எங்கும் எளிதாக மின்சார, சக்தி தேவைகளை தீர்த்துக் கொள்ள முடியும். தற்போது இந்த தொழில்நுட்பம் நாசாவிடம் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து