முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் கோசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்: யோகி அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: உ.பி.யில் பசுக்களைப் பாதுகாக்கும் கோசாலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அதன் வரவு செலவு கணக்குகள் இனி தணிக்கை செய்யப்படுவதுடன், பசுக்கள் மீதான பிரமாணப் பத்திரங்களும் தாக்கல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவா பட்டியலில் பசு பாதுகாப்பு முக்கிய இடம் பெற்றுள்ளது. இதனால், உ.பி.யில் பாஜக அரசின் ஆட்சி அமைந்தது முதல் பசு மாடுகள் மீதான கவனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இறைச்சிக்கு இங்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நலிந்த பசுக்களை வெட்டுவதற்கும் முழுமையான தடை உத்தரவை பாஜக அரசு பிறப்பித்தது. இந்த நடவடிக்கைகளை கண்காணித்து பசுக்களை பராமரிக்க புதிதாக 'உ.பி. பசு மாடு பாதுகாப்பு ஆணையம் (உ.பி. கவ் ரக்ஷக் ஆயோக்)' என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடுகளின்படி, உ.பி.யில் கோசாலைகளை நடத்துபவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளின் கணக்கு வழக்குகள் சமர்ப்பிக்க வேண்டும். தம் கண்காணிப்பில் புதிதாக எடுக்கும் பசுக்களின் விவரம் குறித்தும் அந்த ஆணையத்திடம் ரூ.100-க்கான பிரமாணப் பத்திரம் எழுதி தாக்கல் செய்ய வேண்டும். இத்துடன், அதன் போட்டோ மற்றும் வீடியோ பதிவுகளையும் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஆணையம் விரும்பும் சமயத்தில் அந்த கோசாலைகளில் திடீர் சோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உ.பி.யில் கோசாலைகள் எண்ணிக்கை சாதாரணமாகவே அதிகம் உள்ளன. இதற்கு நிதி மற்றும் நிலம் அரசு சார்பில் கிடைப்பதால் அவற்றின் பெயரில் ஆக்கிரமிப்புகளும் சட்டவிரோதச் செயல்களும் நடைபெறுகின்றன. இந்த கோசாலைகள் புதிய அரசு வந்த பின் மேலும் கூடியதே தவிர அதன் பாதுகாப்பு கூடவில்லை. தற்போது, கோசாலைகளில் நிரம்பி வழியும் பசுக்களின் பாதுகாப்பு சரியாகக் கிடைப்பதில்லை எனப் புகார்கள் அரசிற்கு வந்தபடி உள்ளன. இவற்றின் மீது இனி புதிதாக அமைக்கப்பட்ட பசு பாதுகாப்பு ஆணையம், மாவட்டக் காவல்துறையினர் உதவியுடன் நடவடிக்கை எடுக்கவும் யோகி அரசு உத்தரவிடப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து