முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் கட்டாயம் : மத்திய அரசு அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் தேவை மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

 மத்திய அரசு தற்போது பல அத்தியாவசிய தேவைகள் அனைத்திற்கும் ஆதார் கார்ட் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தி வருகிறது. செல்போன் நிறுவனங்கள் கூட ஆதார் கார்டை கட்டாயமாக்கி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பாஸ்போர்ட் பெறவும் ஆதார் கார்ட் கட்டாயம் என்று கூறப்பட்டு இருக்கிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்டோர் பாஸ்போர்ட் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும். ஆனால் தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற ஆதார் மட்டும் போதாது. ஆதார் கார்டுடன் மேலும் இரண்டு ஆவணங்கள் தேவை என மத்திய அரசு கூறியுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆதாருடன் ரேஷன் கார்ட், அரசு ஊழியர் கார்ட் சமர்ப்பிக்கலாம். அரசு ஊழியராக இல்லாதவர் ஆதாருடன் வங்கி கணக்கு, பான் கார்ட் சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் 18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் ஆதாருடன் மாணவர் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய நடைமுறை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்து இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து