முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம்: டிராய் பரிந்துரை

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  விமான பயணத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்து இருக்கிறது.

தற்போது விமானத்தில் செல்லும் போது செல்போன் மற்றும் இணையம் பயன்படுத்தக் கூடாது என்று சட்டம் விதிக்கப்பட்டு இருக்கிறது. எலக்ட்ரானிக் கருவிகளில் இருக்கும் சிக்னல்களும் விமானத்தில் இருக்கும் சிக்னல்களும் குழம்பிப் போக வாய்ப்பு இருக்கிறது. இதனால் பெரிய விபத்துக்கள் கூட நேர வாய்ப்பு உள்ளது. ஆனால் இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த பிரச்சனையை எளிதாக சரி செய்ய முடியும். இதன் காரணமாக விமானத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது.

விமான போக்குவரத்து துறைக்கு டிராய் எழுதிய கடிதத்தில் இந்த பரிந்துரையை செய்துள்ளது. அதே போல் விமானத்தில் இணையதளம் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என டிராய் கூறியுள்ளது. இதன் மீது விமான போக்குவரத்து துறை சில நாட்களில் முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் விமானத்தில் செல்போன் பயன்படுத்தலாம். இந்த சிக்னல்கள் விமான சிக்னல்களை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் முன்னேற்பாடுகள் செய்யப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து