வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் : அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      தர்மபுரி
1

 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்விற்கு கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமை வகித்தார்.

பாசனத்திற்கு தண்ணீர்

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்புகளுக்கு பாசனத்திற்காக 19.01.2018 இன்று முதல் 25 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு ஒரு முறையும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு சுழற்சி முறையில் இரண்டு நனைப்புகளுக்கு என மொத்தம் 285.70 மி.க.அடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளார்கள்.

அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து 2017-18 (பசலி 1427) பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக புதிய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 8550.00 ஏக்கர் நிலங்களும், பழைய ஆயக்கட்டு பாசனப்பரப்பு 1967.00 ஏக்கர் நிலங்களும் மொத்தம் 10,517 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு புதிய ஆயக்கட்டு பகுதியான வலதுபுற கால்வாயில் 50 கன அடியும், இடதுபுற கால்வாய்களில் 45 கன அடியும் நேற்றுஇரண்டு நனைப்புகளுக்கு தண்ணீர் விடவும், முதல் நனைப்பிற்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும், 2-வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் தண்ணீர் விட்டு 5 நாட்கள் நிறுத்தியும், 2-வது நனைப்புக்கு முதல் மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் 2-வது மண்டலத்திற்கு 5 நாட்களுக்கும் மொத்தம் 25 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு 1 முறையும், வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அதிக விளைச்சல்

இதன்மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், அலமேலுபுரம், ஒத்தியாம்பட்டி, தென்கரைக்கோட்டை, பறையப்பட்டி, மோளையனூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, பூதநத்தம் மற்றும் ஜம்மனஅள்ளி ஆகிய 17 கிராமங்கள் பயன்பெறும். மேலும், நெல் 750 ஏக்கர், கரும்பு 1750 ஏக்கர், ராகி 500 ஏக்கர், மக்காச்சோளம் 1250 ஏக்கர், மரவள்ளி 2000 ஏக்கர், நிலைப்பயிர்களான கரும்பு, நெல், தென்னை, மரவள்ளி ஆகியன 4000 ஏக்கர் என வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்ய பயன்பெற உள்ளதுஎனவே விவசாய பொதுமக்கள் பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு அதிக விளைச்சல் பெறுமாறு விவசாய பெருமக்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், இணை இயக்குநர் (வேளாண்மை) சுசீலா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், உதவி பொறியாளர் செல்வகுமாரி, கூட்டுறவு சங்கத்தலைவர்; நல்லதம்பி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, அரசு வழக்கறிஞர் பசுபதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜேந்திரன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சரவணன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயப்பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து