முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: தமிழக மீனவர்கள் மூவர் கைது.

வெள்ளிக்கிழமை, 19 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

 ராமேசுவரம்,-  இலங்கை தலைமன்னார் அருகே ஹெராயின் போதைப் பொருளை நாட்டு படகி்ல் கடத்தி சென்ற  தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினர் நேற்று சிறைபிடித்து,ஹெராயினை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகக் கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்குக் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குக் கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்துவதும் தொடர்ந்து வருகிறது. நேற்றுக்கு முன்தினம் இலங்கை காங்கேசன்துறை கடற்பகுதியிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தவிருந்த 7 கிலோ தங்கக் கட்டிகளை இலங்கைக் கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று தமிழக கடலோரப்பகுதியிலிருந்து 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்று  தலைமன்னார் தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் நாட்டுபடகை சோதணையிட்டனர்.அப்போது நாட்டுப்படகில் ஹெராயின் போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து,போதைப்பொருளை கைப்பற்றினர்,மேற்கொண்டு மீனவர்களை விசாரணை நடத்தியபோது தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரம் பகுதியை சேர்ந்த சேவியர்,கிங்ஸ்டான் எனவும் தெரியவந்தது.இவர்கள் வைத்திருந்த நாட்டு படகு தமிழக அனுமதி பெறாமல் இயங்கி வந்ததும் என தெரிவவந்தது.மேலும் அந்தப் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப் பொருளும்  410 மி.கிராம் எடையளவு எனகண்டு பிடிக்கப்பட்டது.இனைத் தொடர்ந்து அந்த நாட்டுப்படகில் இருந்த தமிழக மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் மன்னார் துறைமுகத்தில் வைத்து  இலஹ்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து