எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ், என் நண்பர் மட்டும்தான். அவருக்கும், எனக்கும் திருமணம் இல்லை என்று நடிகை அனுஷ்கா கூறியிருக்கிறார்.
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களிலும் அனுஷ்கா கதாநாயகியாக நடித்தார். அந்த 2 படங்களிலும் கதாநாயகனாக நடித்தவர், பிரபாஸ். தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் இவருக்கும், அனுஷ்காவுக்கும் ‘பாகுபலி’ படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்ததாகவும், இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், தெலுங்கு பட உலகில் தகவல் பரவியது.இந்த தகவலில் உண்மை இல்லை என்றும், அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்றும் பிரபாஸ் கூறினார்.
இந்த நிலையில், அனுஷ்கா நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘பாகமதி’ படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது அவர் சென்னை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அனுஷ்கா பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-“பாகுபலி படத்துக்கும், பாகமதி படத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அது, வேறு கதை. இது, வேறு கதை. இது, ஒரு திகில் படம். இதில், ‘சஞ்சனா’ என்ற ‘ஐ.ஏ.எஸ்.’ அதிகாரியாக நடித்து இருக்கிறேன். இந்த படத்தின் டைரக்டர், தயாரிப்பாளர் ஆகிய இருவரும் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். கதையும், கதாபாத்திரமும் எனக்கு பிடித்து இருந்தது.
அதனால் நடிக்க சம்மதித்தேன்.இதுவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைதான். உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்து இருந்தார். தமிழ் ரசிகர்களுக்கு ‘பாகமதி’ படம் மிகவும் பிடிக்கும். படத்தில், எனக்கு சண்டை காட்சிகள் கிடையாது.‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக நான் என் உடல் எடையை கூட்டி, நடித்தேன். உடம்பு குண்டான பின், அதை குறைக்க முயற்சி செய்தேன். கொஞ்சம் கொஞ்சமாக எடையை குறைத்து வருகிறேன்.
‘யோகா’ மூலம் ஓரளவு என் உடல் எடை குறைந்து இருக்கிறது.தமிழ் பட உலகில் எனக்கு பிடித்த நடிகர், ரஜினிகாந்த். இப்படி சொல்வதன் மூலம் மற்ற நடிகர்களை எனக்கு பிடிக்காது என்று அர்த்தம் அல்ல. எல்லா கதாநாயகர்களும் நண்பர்கள்தான்.எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள் என்ற தகவலில் உண்மை இல்லை. முதலில், நல்ல பையன் கிடைக்கட்டும். அவரை எனக்கு பிடித்தால், உடனே திருமணம்தான். நண்பர்கள், ரசிகர்கள் என எல்லோரையும் அழைத்து, அவர்கள் வாழ்த்துக்களுடன் திருமணம் செய்து கொள்வேன்.
எனக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் இருந்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் பேசப்படுவதில், உண்மை இல்லை. நிச்சயமாக, அவருடன் எனக்கு திருமணம் இல்லை. பிரபாஸ், எனக்கு நல்ல நண்பர். அவ்வளவுதான்.
‘தெய்வ திருமகள்,’ ‘தாண்டவம்’ ஆகிய இரண்டும் தமிழில் எனக்கு பிடித்த படங்கள். ‘பாகுபலி’ படத்துக்காக எனக்கு தேசிய விருது கிடைக்கவில்லையே என்று நான் கவலைப்படவில்லை. ரசிகர்கள், பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் என் நடிப்பு பிடித்தால் போதும். அவர்களின் பாராட்டுகள்தான் மிகப்பெரிய விருதுகள்.”இவ்வாறு அனுஷ்கா கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள