முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.டி.சி நிகர லாபம் 17% உயர்வு

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      வர்த்தகம்
Image Unavailable

ஐடிசி நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு நிகர லாபம் 16.75% உயர்ந்து ரூ.3,090 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் லாபம் ரூ.2,646 கோடியாக இருந்தது. டிசம்பர் காலாண்டில் மொத்த வருமானம் ரூ.10,579 கோடியாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.14,257 கோடியாக இருந்தது.

மறைமுக வரிகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் கடந்த ஆண்டு வருமானத்துடன் ஒப்பிட முடியாது என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த காலாண்டில் செலவுகள் ரூ.6,362 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.10,303 கோடி அளவுக்கு செலவுகள் இருந்தன. நேற்று முன்தினம் வர்த்தகத்தில் இந்நிறுவனப் பங்கு 0.42 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து