முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம் ஆத்மிக்கு எதிராக சதி கெஜ்ரிவால் சொல்கிறார்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிவரும் என்றும், ஆம் ஆத்மிக்கு எதிராக சதி நடக்கிறது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு, கடந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதி 21 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவை செயலாளர்களாக நியமித்தது. எம்.எல்.ஏக்கள் ஆதாயம் தரும் 2 பதவிகளை வகிப்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல். எனவே, அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியிகள் ஜனாதிபதியிடம் புகார் தெரிவித்தன.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுகிறது. உண்மையாகவும், நேரடியாகவும் நடந்து கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும்.  - கெஜ்ரிவால்

இந்த புகார் கடிதம், ஜனாதிபதி மாளிகையில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்களிடம் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது.. 21 எம்.எல்.ஏக்களில் ஒருவர் தனது பதவியை ராஜினமா செய்து விட்டதால், 20 எம்.எல்.ஏக்கள் மீதான விசாரணை மட்டுமே தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேரையும் தகுதி நீக்கம் செய்யலாம் என ஜனாதிபதிக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. இதுகுறித்த கருத்து தெரிவித்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்,

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக திட்டமிட்ட சதி நடைபெறுகிறது. உண்மையாகவும், நேரடியாகவும் நடந்து கொண்டால் இதுபோன்ற பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், நேர்மையான சமூகம் நம் பின்னால் இருக்கும். கடவுள் கைவிட மாட்டார். உண்மை விரைவில் வெளிவரும். வரலாறு இதைத் தான் உணர்த்துகிறது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து