முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மல்லையாவுக்கு கைது வாரண்ட் பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, வங்கிகளுக்கு கடனை செலுத்தாமல் லண்டனில் வாழும் தொழிலதிபர் விஜய் மல்லையாவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மோசடி வழக்கில் தொடர்புடைய மல்லையா மற்றும் 18 பேரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நிறுவனத்துக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தவறான தகவல்களை காண்பித்து மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. விஜய் மல்லையா மற்றும் யு.பி குழும அதிகாரிகள் குறிப்பாக தலைம நிதி அதிகாரி ஏ.கே. ரவி நெடுங்காடி, டெக்கான் ஏவியேஷன் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத், ஆம்பிட் நிறுவனத்தை சேர்ந்த அசோக் வாத்வா மற்றும் நிறுவனத்தின் முன்னணி சார்டர்ட் அக்கவுன்டென்டுகளுக்கும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட விஜய் மல்லையா முதல் 19 நபர்களுக்கும் நிறுவன சட்ட விதிகள் 2013-ன் படி புதிதாக சிறப்பு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் பரிந்துரைத்தது. நிறுவன சட்ட விதிகளின் படி இவர்களுக்கு 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் இவர்களின் தண்டனை அளவுக்கேற்ப மூன்று மடங்கு வரை அபராதமும் விதிக்க வகையுள்ளது. இந்த வழக்கில் மோசடி செய்யப்பட்ட அளவு மிக அதிகம் என்றும் அதைக் கருத்தில் கொண்டே இந்த நீதிமன்றம் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்ததாக நீதிபதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து