முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது இந்தியா

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

தவுரங்கா : நான்கு நாடுகள் பங்கேற்றுள்ள ஹாக்கி தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியுடன் மோத உள்ளது.

இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்கும் ஹாக்கி போட்டி நியூசிலாந்தின் தவுரங்கா நகரில்  நடைபெற்று வருகிறது. இதில், மன்பீரீத் சிங் தலைமையிலான இந்திய அணி நேற்று தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என வீழ்த்தியது. இரண்டாவது ஆட்டத்தில் பெல்ஜியத்திடம் 0-2 தோல்வி அடைந்தது.

இந்தியா வெற்றி...

இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் இந்தியா 3-1 என வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்தியா தரப்பில் ஹர்மன்பிரீத் சிங், தில்பிரீத் சிங் மற்றும் மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் கேன் ரஸ்ஸல் கோல் அடித்தார்.  இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பலப்பரீட்சை....

இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பெல்ஜியம் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்த உள்ளது. உலகின் மூன்றாம் தரநிலை அணியான பெல்ஜியம் அணியிடம் லீக் சுற்றில் அடைந்த தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து