முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : லியாண்டர் பயஸ் - பூரவ் ஜோடி 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சனிக்கிழமை, 20 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி முன்னேறியுள்ளது.

நேர் செட்டில்...

ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் போட்டிகள் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஜோடி இரண்டாவது சுற்றில் பிரேசிலின் புரோனோ சாரிஸ் - பிரிட்டனின் ஜேமி முரே ஜோடியை எதிர்கொண்டது.

கொலம்பியா...

இந்திய ஜோடி 7-6, 5-7, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. டைபிரேக்கரில் முடிந்த போட்டியின் இறுதி செட்டில் மிகவும் சிறப்பாக விளையாடிய புரவ் ராஜா வெற்றி பெற கடைசி புள்ளியை பெற்று தந்தார்.  மூன்றாவது சுற்றில் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா ஜோடி கொலம்பியாவின் ஜூயான் செபஸ்டீன் காபல் - ராபர்ட் பராக் ஜோடியை எதிர்கொள்ள உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து