முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் : முதல்வர் எடப்பாடி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பாலூர் கிராமம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த முருகேசன் என்பவரின் மகன் வெங்கடேசன் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம்,  சௌரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆதி என்பவரின் மகன் செல்வன் நிமிலன் என்பவர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், மேலூர் கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரின் மனைவி சரஸ்வதி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி தங்கம் ஆகியோர் மரம் விழுந்து அறுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், நாரணம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மின்கம்பத்தில் வேலை பார்க்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், முடுக்கன்துறை கிராமத்தைச் சேர்ந்த செங்கோடன் மகன் வீரமணி என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சேலம் மாவட்டம், சேலம் தெற்கு வட்டம், அமாணி கொண்டலாம்பட்டி கிராமத்தில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்த முத்துசாமி என்பவரின் மகன் கோவிந்தராஜன் என்பவர் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வடக்கு வட்டம், வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஊனை வாணியம்பாடி மதுரா ஏரிப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்கள் என்ற செய்தியையும், மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டம், ஊர்மெச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வீரன் என்பவரின் மகன் மகாலிங்கம் என்பவர் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து