முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாவின் வழியில் முதல்வரும், துணை முதல்வரும் : மாணவர்கள், மக்கள் நலனுக்காக பாடுபடுகின்றனர் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

Source: provided

திண்டுக்கல் :  மறைந்த முதல்வர் அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் உயர பாடுபட்டு வருகின்றனர் என்று திண்டுக்கல்லில் நடந்த கல்லூரி விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

திண்டுக்கல் நொச்சியோடைப்பட்டி அனுகிரஹா அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மையை நாம் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த தேசிய அளவிலான பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்றார். துணை முதல்வர் சூசைமாணிக்கம், சேர்மன் அருமைநாதன், கல்லூரி செயலாளர் லாரன்ஸ், பேராசிரியர் வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெங்களூர் நிமன்ஸ் நிறுவனமும், அனுகிரஹா அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய இம்முகாமில் பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவ, மாணவிகளை வாழ்த்தி பாராட்டி வருவாய்த்துறை அமைச்சரும், பேரிடர் மேலாண்மை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றுகையில், பேரிடர் ஏற்படும் போது அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் எப்போதாவது தான் சுனாமி, நிலச்சரிவு போன்ற பேரிடர் ஏற்படும். ஆனால் சமீபகாலமாக இவை அதிகரித்துள்ளது. தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழையின் போது 48 சதவீதம் மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை மூலமாக 32 சதவீதம் மழை பெய்யும். இதன்மூலம் பெறக்கூடிய தண்ணீரை வைத்துத்தான் குடிஞிர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சரியான மழைப்பொழிவு கிடைக்காவிட்டால் வறட்சி ஏற்படும்.

சில நேரங்களில் பேரிடர் நிகழ்வு ஏற்படுகிறது. அதனைத் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் தாழ்வான பாதிக்கப்பட்ட பகுதி. பாதிக்கப்படக்கூடிய சூழல் உள்ள பகுதி உள்ளிட்ட 5 வகையாக அடையாளம் கண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வானிலை அறிக்கை கிடைத்தவுடன் மக்களுக்கு தேவையான நிவாரணமும் பாதுகாப்பு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டு உணவு, உடை ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரிடரின் போது மக்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதிசெய்யப்பட வேண்டும்.

அம்மாவின் ஆட்சியில் சுனாமி பேரலை ஏற்பட்ட போது அவரது துரித நடவடிக்கையால் மீட்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்பினர். இவ்வாறு செய்த நடவடிக்கையை மற்ற மாவட்டங்களுக்கும், பிற நாடுகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடலோர 13 மாவட்டங்களில் அடிக்கடி பேரிடர் ஏற்படுகின்ற காரணத்தால் முதல்நிலை காவலர்களாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  அப்பகுதியை நன்கு அறிந்தவர்களே இப்பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

மேலும் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், மாணவர்கள் மட்டுமின்றி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அரசு பயிற்சி அளித்து வருகிறது.
வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அம்மாவின் ஆட்சியில் தான் முதன் முதலாக வறட்சிக்கும் நிவாரணம் வழங்கப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி, கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்தார். மாணவர்களுக்கு தேவையான 16 கல்வி உபகரணங்களை அம்மா வழங்கினார்.

தொலைநோக்கு திட்டத்தோடு மாணவர்களின் நலன் கருதி அம்மா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். தனிநபர் வருமானம் உயர வேண்டும் என்பதற்காகவும் அம்மா திட்டங்களை அறிவித்தார். அம்மாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மாணவர் சமுதாயம் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்பதற்காக பாடுபட்டு வருகின்றனர் என்று பேசினார்.

அதன்பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியில், அரசு போக்குவரத்துக் கழகங்கள் லாப நோக்கோடு செயல்படுத்தப்படுவதில்லை. மக்களின் சேவைக்காகவே போக்குவரத்து கழகங்கள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக கிராம மக்கள் தங்குதடையின்றி செல்வதற்கு சாலை வசதி, புதிய பேருந்து வசதி, புதிய வழித்தடங்கள் உருவாக்குதல் போன்றவை உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக அண்டை மாநிலங்களில் போக்குவரத்து கட்டணம் பலமுறை மாற்றி உயர்த்தியுள்ளனர்.

ஆனால் தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள டீசல் விலையேற்றத்தின் காரணமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து கழகம் நலிந்து விடக்கூடாது. அதனைக் காப்பாற்ற வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்ததொரு சேவை அளிக்க வேண்டும் என்பதாலேயே முதல்வரும், துணை முதல்வரும் பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து கட்டண உயர்வை அறிவித்துள்ளனர் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து