முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாக். ராணுவ நடத்திய தாக்குதல்: 4 நாட்களில் 5 வீரர்கள் உள்பட 11 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்தி வரும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 5 வீரர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகி உள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை கோட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதிகளான கதுவா, ஜம்மு, பூஞ்ச், ரஜோரி, ராம்கார்க் ஆகிய பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும், தானியங்கி துப்பாக்கி மூலம் சுட்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் ராய், குண்டு காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார், அவர்  நேற்று உயிரிழந்தார். பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறிய செயலால் உயிரிழப்பு 11 ஆக உயர்ந்துள்ளது என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் மூலம் கடந்த 4 நாட்களில் 3 ராணுவ வீரர்கள், பி.எஸ்.எப். வீரர்கள் இருவர், 6 பொதுமக்கள் என 11 பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து