சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகைப்பூ ரூ 6000க்கு விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி அருகே உள்ள மண்டபத்தில் பூ மொத்த மார்க்கெட் இயங்கி வருகிறது.  இங்கு 30க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. 

எகிறும் பூ விலை

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள புளியம்பட்டி, செந்தட்டி, நொச்சிகுளம், பொய்கை, வடக்குப்புதூர், ஆலங்குளம், வீரிருப்பு, களப்பாகுளம், இருமன்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூ உற்பத்தி செய்யப்படுகிறது.  இங்கு பூ உற்பத்தி செய்யப்படுவதற்குரிய தட்ப வெப்பம் நிலவுவதால் இங்கு பெரும்பாலான விவசாயிகள் பூ உற்பத்தி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டிற்கு அரளி, பிச்சி, மல்லிகை, கனகாம்பரம், கேந்தி, சம்பங்கி உள்ளிட்ட 12 வகையான பூக்கள் விவசாயிகள் கொண்டு வருகின்றனர்.  இங்கு இருந்து நெல்லை, இராஜைபாளையம், மதுரை, தோவாளை உள்ளிட்ட நகரங்களுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் சங்கரன்கோவிலில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டிற்கு சீசன் காலங்களில் தினமும் 2000 கிலோ மல்லிகைப்பூ வரத்தும், சாதாரண காலங்களில் 1000 கிலோ மல்லிகைப்பூவும் வரத்தும் வருவது வழக்கம்.  தற்போது பனிப்பொழிவு காலங்;களில் மல்லிகைப்பூ வரத்து குறைந்து உள்ளது.  இதனால் நேற்று சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டிற்கு மொத்தம் 15 கிலோ மல்லிகைப்பூ வரத்து வந்துள்ளது.  இதனால் நேற்று 1 கிலோ மல்லிகைப்பூ ரூ 6000த்திற்கு விற்பனையானது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து