முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150 ஆண்டுக்குப்பின் வானில் தெரியும் முழு சந்திரகிரகணம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

சென்னை : 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் தேதி நிகழ உள்ளது. இது நீல நிலா என்று அழைக்கப்படுகிறது.

வானத்தில் பால் போல வட்ட நிலவை பார்த்திருப்போம். சில நேரங்களில் சிவப்பாகவும், ஏன் லேசான மஞ்சள் நிறத்தில் கூட தென்பட்டிருக்கும். ஒரே மாதத்தில் இரண்டு பவுர்ணமிகள் தோன்றும் போது நிலவின் வடிவத்தில் நிறத்தில் மாற்றங்கள் ஏற்படுகிறது. வானில் படிந்துள்ளது எரிமலையின் சாம்பல் துகள்கள், புகை காரணமாக நிலவில் மாறுபாடுகள் ஏற்படுகிறது. 2018ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் Super Blue Blood நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி ஒன்று மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளில் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்றும் என நாசா ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஜனவரி 1ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது. 2018ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. இந்தியத் துணைக்கண்டம், மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா ஆகியவை இந்த கிரகணம் ஏற்கெனவே தயார் நிலையில் உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் தேதியன்று மாலை 4 மணி 21 நிமிடத்தில் லேசாக பிடிக்கத் தொடங்கும் சந்திரகிரகணம் 6 மணி 21 நிமிடத்தில் முழுமையான கிரகணமாக உச்சமடைகிறது. இது 7 மணி 37 நிமிடம் வரை முழுமையாக நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் கண்களால் கிரகணத்தை காண முடியும். மெல்ல மெல்ல விடுபட்டு இரவு 9.38 மணிக்கு சந்திர கிரகணம் நிறைவடைகிறது. இந்த ஆண்டின் அரிய நிகழ்வாகும்.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழுமையாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா, ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

சந்திரன் முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும். மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என ஸ்பேஸ் டாட்.காம் இணையதளம் தெரிவித்துள்ளனது.

முழு சந்திர கிரகணகம் வரும் 31ஆம் தேதியன்று நிகழ உள்ளது நீல நிலா முழு சந்திர கிரகணமாகும். இந்த ஆண்டின் முழு சந்திர கிரகணம் இதுவாகும். அடுத்த முழு சந்திரகிரகணம் டிசம்பர் 31, 2028ல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037ல் நிகழும்.

150 ஆண்டுக்குப்பின் நீல நிலா

அன்றைய தினத்தில், நிலா பூமியின் மிக அருகில் இருக்கும். எப்போதும் காணப்படுவதை விட 30 சதவிகிதம் பெரிதாகவும், பிரகாசமாகவும் வானில் தென்படும். இதை சூப்பர் நிலா என்றும் இராட்சத நிலா என்றும் பலர் வர்ணிக்கிறார்கள். இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக நிகழ்ந்தது மார்ச் 31, 1866ஆம் ஆண்டாகும். என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து