கடைநல்லூர் நகராட்சியில் டெங்கு விழிப்புணர்வு பணிகள்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருநெல்வேலி
nellai dengu awerness camp

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் கலெக்டர் அவர்களின் உத்தரவின்படி நகராட்சி,பேரூராட்சி, சுகதாரத்துறை,வருவாய்த்துறை  பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள்   1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்புதுடன் மெகா தூய்மை,கொசு ஒழிப்பு  மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள்  மாவட்ட வருவாய் அலுவலர்  முத்துராமலிங்கம் , சேரன்மகாதேவி சார் ஆட்சியர்  ஆகாஷ்  ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

துாய்மை பணிகள்

கடையநல்லூர் நகராட்சி  4வது வார்டு வெரியன் கோயில் தெரு, 8 வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெரு, 22வது வார்டு இந்திரா நகர்,28 வது வார்டு பேட்டை, 29 வது வார்டு மதினா நகர், 30வது வார்டு ரைஸ்மில் தெரு,31 வது வார்டு காதர் மொகைதீன் பள்ளி தெரு,32 வது வார்டு ரகுமாணியாபுரம் ஆகிய வார்டு  பகுதியில் உள்ள 64 தெருக்களிலும் இன்று மெகா தூய்மை,கொசு ஒழிப்பு  மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் மேற்;கொள்ளப்பட்டது.இப்பணிகளில் ளையம்,அம்பாசமுத்திரம்,தென்காசி,செங்கோட்டை,சங்கரன்கோவில்.விருதுநகர்,சிவகாசி,மற்றும் கடையநல்லூர் அகிய நகராட்சிகளை சேர்ந்த 347 கொசு ஒழிப்பு பணியாளர்கள், கடையநல்லூர் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள்,பேரூராட்சிகளின் கொசுஒழிப்பு பணியாளர்கள் 154 நபர்களும்,துப்புரவு பணியாளர்கள் 164 நபர்கள்,திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த  சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 100 நபர்கள,;; 35 மருத்துவர்கள், ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் 65 கொசு மருந்து புகை அடிக்கும் கருவிகளும் 14 கூடுதல் குப்பை ஏற்றிச்செல்லும் வாகனங்களும் இப்பணிகளில் ஈடுப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் வருவாய் கோட்டாட்சியர்,துணை ஆட்சியர்கள் கண்காணிப்பில் மெகா தூய்மை,கொசு ஒழிப்பு  மற்றும் டெங்கு விழிப்புணர்வு பணிகள் மேற்;கொள்ளப்பட்டது. அனைத்து வீடுகளிலும் கொசு  புழு ஒழிப்பு பணிகளும்,கொசு புகை மருந்து அடிக்கும் பணிகளும் மேற்;கொள்ளப்பட்டது. கொசு புழு கன்டறியப்பட்ட வீடுகளுக்கு அபராதம் விதிக்கபட்டது. காலிமனை பகுதிகளில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டதுஇப்பணிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட மாவட்ட திட்ட அலுவலர்  கெட்ஸி லீமா அமலினி, வருவாய் கோட்டாட்சியர்கள் (திருநெல்வேலி)  மைதிலி, (தென்காசி) ராஐந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் புண்ணியகோட்டி,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  மகேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்  நிர்மலா, கலால் உதவி ஆணையர் பழனி குமார், சுகாதார பணிகள்துணை இயக்குநர் மரு.சோமசுந்தரம் உதவி இயக்குனர் (தனிக்கை) விஷ்னுவரன்,கடையநல்லூர் நகராட்சி ஆணையர் அயூப்கான், சுகாதார அலுவலர்  சீனிவாசன்,மற்றும் அவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து