சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து கோப்பு அனுப்பினால் தான் நியமன உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-துச்சேரியில் பஸ் கட்டணத்தை உயர்த்துவதற்காக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை இன்னும் தரவில்லை. அறிக்கையில் என்ன கூறப்பட்டள்ளதோ அதன்படி கட்டண உயர்வு சம்மந்தமாக முடிவு எடுக்கப்படும். அது வரை பஸ்களில் பழைய கட்டணங்களையே வசூக்க வேண்டும். எந்த பஸ்சிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது.

சம்பள விவகாரம்

இங்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவது சம்மந்தமாக நாளை(இன்று) முக்கிய முடிவு எடுக்கப்படும். அதன் பிறகு எந்த மாதிரி கட்டணத்தை உயர்த்துவது என்பது குறித்து முடிவு எடுத்து அறிவிக்கப்படும். நான் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் காரைக்காலில் பாஸ்போர்ட் சேவை மையம் அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறி இருந்தார். அதன்படி காரைக்காலில் 60-வது பாஸ்போர்ட் சேவை மையத்ததை திறந்து வைத்துள்ளார். நாட்டிலேயே முதன் முறையாக மத்திய வெளியுறவுது;துறை அமைச்சர் திறந்து வைத்துள்ள பாஸ்போர்ட் மையம் காரைக்கால் என்பது பெருமைக்குரியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன் அடைவர்கள். இவர்கள் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இது குறித்து குழு கூட்டி பேசி முடிவு எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். வீடுர் அணையில் இருந்து புதுவைக்கு தண்ணீர் திறக்க ஒப்பந்தம் உள்ளது. அதன்படி கடந்த காலங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடு;க்க வேண்டும். நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த கடிதத்தை காட்டி நியமன உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனது ஆலோசனை இல்லாமல் கவர்னர் உத்தரவிட்டுள்ளது விதிமுறைகளுக்கு புறும்பானது. கருவூலத்தின் தலைமை அதிகாரிகு;கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் எந்த நிதியும் வழங்க கூடாது என்று நான் உத்தரவிட்டிருந்தேன். சட்டமன்ற உறுப்பினர்களாக பணிபுரிகிறார்கள் என்று சபாநாயகர் அலுவலகத்தில் இருந்து கோப்பு அனுப்பப்படும். அப்படி அனுப்பினால் தான் அவர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வழக்கு உள்ளதால் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். உள்துறை அமைச்சரின் கடிதத்தை வைத்துக் கொண்டு அரசுக்கு எதிராக செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிர்வாகத்தில் உள்ள அனைவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களின் கடமைகளை செய்ய வேண்டும். ஆர்வக்கோளாறால் விதிமுறைகளை மீறும்போது அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே அது போன்ற விவகாரத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை படிப்பினையாக வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து அரசு அதிகாரிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டால் தான் அர்கள் கடமையை செய்வதாக இருக்கும். இல்லையென்றால் அவர்களை பாதுகாப்பதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.புதுவையில் மழை வெள்ளம் காரணமாக பல சாலைகள் கு;ண்டும் குழியுமாக இருந்து வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்ச்pவாயம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் வழுதாவூர் சாலை செப்பணிடும் பணி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராத விதமாக கரடுமுரடான சாலையில் விபத்து ஏற்பட்டு மாணவி இறந்துள்ளார். இதற்கு காரணமாக வைத்துக் கொண்டு சிலர் அரசியல் ஆதாயம் தேட ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து