குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் கூடுதல் ஆட்சியர் ராகுல்நாத் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      கன்னியாகுமரி
kumari job mela

தமிழக முதல்வர் அவர்களது உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தந்து நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொடுக்கும் பொருட்டு, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

வேலை வாய்ப்பு முகாம்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் அகஸ்தீஸ்வரம், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நாகர்கோவில் நகராட்சி பகுதிகளை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரும் நோக்கத்தில் வட்டார அளவிலான வேலை வாய்ப்பு முகாம் 20.01.2018 தேதியன்று ரோகிணி பொறியியல் கல்லூரி, பால்குளம், அஞ்சுகிராமத்தில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகள் பகுதிகளை சார்ந்த வேலை வாய்ப்பற்ற 1723 இளைஞர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் உள்ளுர் மற்றும் சென்னை, திருவனந்தபுரம், பெங்களுரு போன்ற பெருநகரங்களிலிருந்து பன்னாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைக்கு   350 இளைஞர்களை தேர்வு செய்தனர். அதில் முதற்கட்டமாக 35  நபர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இம்முகாமினை கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியர்  ஆ. ர. ராஹல்நாத், துவக்கி வைத்தார்கள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் டாக்டர்.சு.சுரேஷ்,முன்னிலை வகித்தார்கள். ரோகிணி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தாளாளர் மு.நீலமார்த்தாண்டன், மேலாண்மை இயக்குநர் டாக்டர்.நீலவிஷ்ணு, முதல்வர் டாக்டர்.சு.ராஜேஷ், வேலை வாய்ப்பு அலுவலர் பு.மு.ஜெபாஸ்சாமுவேல், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஆ.காளிமுத்து ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க  உதவித் திட்ட அலுவலர்கள், ஆ.ஆறுமுகம், ஆ.கலைச்செல்வி, ஆ.மு.பிச்சையப்பா, பி.அந்தோணி சிலுவை,(ஓய்வு), வ.நா.அஜிதா(கண்காணிப்பாளர்), தங்கராஜாவட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், தொகுதி வழிநடத்துநர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து