கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில் மரகன்று நடும்விழா

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருவள்ளூர்
G pundi

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பினர் சார்பில், 200 மரகன்றுகள் நேற்று நடப்ப்டது.கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் பெப்ஸ் என்ற மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில், நேற்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், வட்டாட்சியர் ராஜகோபால் தலைமையில், 200 மரகன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

மரம் நடும் விழா

கும்மிடிப்பூண்டி வன சரகர் மாணிக்கவாசகம் முன்னிலை வகித்து மரங்களின் தன்மைகள், அவற்றை பராமரிக்கும் முறைகள் குறித்து தெளிவாக விளக்கி பேசினார். மாதர்பாக்கத்தில் உள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில், மாணிய விலையில் பெறப்பட்ட, மகாகனி, ஈட்டி, தேக்கு, நாவல், இழுப்பை, பாதாம், வேம்பு ஆகிய வகைளை சேர்ந்த, 200 மரகன்றுகள் நடப்பட்டன. மரகன்றுகளை முறையாக பராமரிக்கும் வகையில், வட்டாட்சியர் ராஜகோபால் சார்பில்,பைப்லைன் மூலம் தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து