முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு மென்பொருள் செயலி அறிமுகம்.

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-:  ராமநாதபுரம் மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான சிறப்பு மென்பொருள் செயலியை (மொபைல் ஆப்)  அமைச்சா் மணிகண்டன்  மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்.
   ராமநாதபுரம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி  மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில்  சனிக்கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். இந்நிகழச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் முன்னிலை வகித்தார்.கூட்ட நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்களின் நலனுக்காக  மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலையில்  சிறப்பு மென்பொருள் செயலியை (மொபைல் ஆப்)  அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு , நவீன செயற்கை கால், சூரிய மின்கலத்துடன் கூடிய காதொலிக்கருவிகள், விலையில்லா தையல் இயந்திரங்கள் மற்றும் விலையில்லா சலவை பெட்டிகள் என 12 பயனாளிகளுக்கு நலத்திட்டப் பொருள்களை அமைச்சரும்,மாவட்ட ஆட்சியரும் வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்.முத்துமாரி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலா் தங்கவேல், தேசிய தகவல் மைய அலுவலா் ராஜசேகா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அண்ணாதுரை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோ் நல அலுவலா் முருகானந்தம், உதவி ஆட்சியா் (பயிற்சி) மணிராஜ் உள்பட மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர்  கலந்து கொண்டனா்.
  அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுத்து சேர்ப்பதில் நம் மாவட்டம் முன்னோடியாக செயல்படுகிறது: நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது:

 மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு பொதுமக்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு மாதாந்திர உதவித்தொகை வழங்குதல், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்குதல், செயற்கை கால், முடநீக்கி கருவி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய திட்டங்களை பொதுமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்ப்பதில் நமது மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குகின்றது. அந்தவகையில் தமிழகத்தில் முதன்முதலாக மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை போக்கிடும் வகையில் புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் செயலி மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை விண்ணப்பிக்கவும், அரசு நலத்திட்டங்கள் குறித்த விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய செயலியினை இராமநாதபுரம் மாவட்ட இணையதளமான( www.ramnad.tn.nic.in) என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில், பயனாளிகள் தங்களது கைபேசி எண்ணை செலுத்தினால், அந்த கைபேசி எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் ((One Time Password ) கிடைக்கப்பெறும். அந்த கடவுச்சொல்லை பயன்படுத்தி இச்செயலியில் உள்ள வசதிகளை எளிதில் உபயோகித்து பயனடையலாம். இராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் இதுவரை மொத்தம் 27,591 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு இந்த அடையாள அட்டை மிகவும் அவசியமாகும். தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருள் செயலியின் மூலம் மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே தங்களது கைபேசியின் வாயிலாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக இணையதளம் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, விண்ணப்பங்களின் நிலை குறித்து குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர இச்செயலியினை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயன்படுத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இத்தகைய புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாவட்ட நிh;வாகத்திற்கும், இதற்காக பணியாற்றிய அலுவலா;களுக்கும் பாராட்டுக்களை தொpவித்துக் கொள்கிறேன் என அமைச்சா் மணிகண்டன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து