தனிநபர் கழிப்பறை பணிகளை 31ம் தேதிக்குள் முடிக்க வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      காஞ்சிபுரம்
kanchi 2

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் ஜனவரி 31ம் தேதிக்குள் தனிநபர் கழிப்பறை அனைத்து ஊராட்சிகளிலும் கட்டி முடித்திட வேண்டும் என ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. துாய்மை பாரத இயக்கம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் தனிநபர் கழிப்பறை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தனிநபர் கழிப்பறை

 இதற்கு அரசு மானியமாக 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், இத்திட்டத்தின் கீழ் 18 ஊராட்சிகளில் அனைத்து குடும்பங்களிலும் கழிப்பறை கட்டி தற்போது பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 55 ஊராட்சிகளில், 3850 குடும்பத்தினர் தங்கள் வீடுகளில் தனிநபர் கழிப்பறை கட்டி விட்டனர். தனிநபர் கழிப்பறை கடடுவதற்கான மானியம் பெற அனைத்து தகுதிகள் இருந்தும், கழிப்பறை கட்டாமல் உள்ளதாக உத்திரமேரூர் ஒன்றிய பகுதியில் 4159 குடும்பத்தினர் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இக்குடும்பத்தை சேர்ந்தோர் விரைவில் கழிப்பறை கட்டி முடித்திட தேவையான நடவடிக்கை எடுக்க கோரி, அனைத்து ஊராட்சி செயலர்களுக்குமான கலந்தாய்வு கூட்டம் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதில், துாய்மை பாரத இயக்க மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்த மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து குடும்பத்தினரும் கழிப்பறை கட்டிட தீவிர பணிகளை அந்தந்த ஊராட்சி செயலர்கள் மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார். கூட்டத்தில் உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ராஜ்குமார், துாய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து