கும்மிடிப்பூண்டியில் புத்தக வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருவள்ளூர்
G pundi 1

கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஞாயிறன்று பறவை போல் வாழ்தல் வேண்டும் என்கிற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

புத்தகம்

 கும்மிடிப்பூண்டி செந்தமிழ்ச்சோலை இலக்கிய அமைப்பின் சார்பாக நடைபெற்ற இலக்கிய விழாவில் கவிஞர் தனுஷ்கோடி எழுதிய பறவை போல் வாழ்தல் வேண்டும் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. விழாவிற்கு செந்தமிழ்ச்சோலை அமைப்பின் நிறுவனர் வ.விஜயரங்கன் தலைமை தாங்கினார். செயலாளர் மு.சிவராமசுப்பிரமணியம்,கோபாலகிருஷ்ணண்,சுரேஷ்,ரவி முன்னிலை வகித்தனர். துலுக்காணம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் பறவை போல் வாழ்தல் வேண்டும் என்ற புத்தகத்தை வெளியிட வழக்கறிஞரும் தொழிற்சங்க பொது செயலாளருமான மு.மணிபாலன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டு உரையாற்றினர். தொடர்ந்து ஆத்தி மாலை வார இதழ் ஆசிரியர் ஜெயச்சந்திரன்,இஸ்ரோ விஞ்ஞானி பா.காமராஜ், சமரச சன்மார்க்க சங்க நிர்வாகி தி.ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் புத்தக ஆசிரியர் கவிஞர் தனுஷ்கோடி நன்றியுரை ஆற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து