அரக்கோணம் ரோட்டரி சங்கம் சார்பில் கண், காது பரிசோதனை முகாம்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      வேலூர்
Dt 22  AKm  POTO  001

 

அரக்கோணம் ரோட்டரி சங்கத்தினர்களின் இலவச கண், காது பரிசோதனை முகாம் நேற்று நடந்தேறியது இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் தனியார் பள்ளியில் அரக்கோணம் ரோட்டரி சங்க நிர்வாகத்தினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண்அறுவை சிகிச்சை மற்றும் காது பரிசோதனை முகாம் நேற்று காலை நடைபெற்றது.

கண்அறுவை சிகிச்சை முகாம்

சென்னை அகர்வால் கண் மருத்துவ குழுவினர் மற்றும் அரக்கோணம் கேஆர் காதொலி மையத்தினர்களுடன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவரும், ஸ்ரீ மஹாலட்சுமி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருமான பி.இளங்கோ தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத்தின் சமூக சேவை இயக்குனரும் (மருத்துவ); முருகன் பார்மஸி உரிமையாளருமான ஆர்.வெங்கட்டரமணன் முன்னிலை வகித்தார். சங்க செயலாளர் தனசேகரன வரவேற்றார். முன்னாள் சங்க தலைவரும், டவுன்ஹால் பொது செயலாளருமான மரு.எஸ்.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார்.

நூற்றுகணக்கான பொதுமக்களுக்கு காது மருத்துவர் சரவணன், கண் மருத்துவர் எம்கே.வனந்தி ஆகியோர் பரிசோதனைகளை செய்தனர் மேலும் முகாம் பணிகளில் ரோட்டரி நிர்வாகிகளான அருள்பேட்டரி குணசீலன் சம்சுதீன், உள்ளிட்ட பலரும் ஈடுபட்டனர் முகாம் நிறைவாக அடுத்தாண்டின் தலைவர் மகேஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து