முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், பெரிய அணைக்கரைப்பட்டியில் இன்று (21.01.2018) காலை 9.00 மணி அளவில் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சியாஸ் கல்யாண். பாரம்பரிய மிக்க ஜல்லிக்கட்டு விதிமுறைகளின்படி நடைபெறுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரிசோதனை

ஜல்லிக்கட்டில் திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 501 காளைகள் பங்கேற்றது. இதில் 487 காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டது. 14 காளைகள் மருத்துவப் பரிசோதனையில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. கால்நடை பராமரிப்புத்துறையின் மருத்துவக்குழுவினர் அனைத்து காளைகளுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே ஜல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்க அனுமதி அளித்தனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை அடக்கும் வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 268 வீரர்கள் ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர் இதில் 263 வீரர்கள் பரிசோதனைக்குப் பின்னர் சீருடைகளுடன், காளைகளை அடக்க களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

விதிகளை பின்பற்றாத 5 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டனர். காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்டது. களம் இறங்கிய பல காளைகளுடன் வாலிபர்கள் களத்தில் நீண்ட நேரம் நின்று சீறி வந்த காளைகளை அடக்கினார்கள். இதில் காளைகளை அடக்கும் போது 10 வீரர்களுக்கு மட்டும் சிறுகாயம் ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கண்டுகளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது. பெரிய அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழக அரசு விதித்த விதிகளின்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் பொன்ராமர், காவல் துணை கண்காணிப்பாளர் ஆசைத்தம்பி, மணப்பாறை வட்டாட்சியர் தனலெட்சுமி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், விலங்குகள் நலவாரிய பிரதிநிதிகள், பொதுப்பணிதுறை, தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, சுகாதாரத்துறை அலுவலர்கள,; ஜல்லிக்கட்டு நடத்தும் கிராம விழா குழுவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து