பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு விசுவகுடி நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      பெரம்பலூர்
pro pmb

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து பொது மக்கள் மற்றும் விவசாயிகளின் தண்ணீர் தேவைக்காக விசுவகுடி நீர்தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும்தண்ணீரை திறந்து விடகோரி மாவட்ட கலெக்டர் வே.சாந்தா அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

தண்ணீர் திறப்பு

அதன் அடிபடையில் மாவட்ட கலெக்டர் அவர்களின் உத்தரவின் பேரில் விசுவகுடி நீர்தேக்கத்தில் இருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்க்காக தண்ணிர் திறந்துவிடும் நிகழ்வு இன்று (21.01.2018)நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் கலந்கொண்டு அணையில் இருந்து தண்ணிiர் திறந்து; வைத்தார். விசுவகுடி நீர்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடுவாதால் விசுவகுடி, அன்னமங்கலம் , முகமதுபட்டிணம் , வெங்கலம,; பிள்ளையார்பாளையம் ,தொண்டாமாந்துறை, பூஞ்சோலை ஆகிய கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு விவாசாய பயன்பட்டிற்க்கும் தண்ணீர் உபயோகபடுத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது அணையில் 23அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது இதில் 15 அடி நீ;ரை தேக்கி வைத்து மீதம் உள்ள 8அடி அளவுள்ள தண்ணீரை பொது மக்களின் குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டுள்ளது.இதுகுறித்து மேலும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன.; தெரிவித்தாவது: பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான மலையாளப்பட்டி சின்னமுட்லு நீர்தேக்கத்திட்டத்திற்கு அரசானை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வுக்காக சுமார் 10 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து அரசுக்கு ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விரைவில் கட்டி முடிக்கப்படும். இந்த அணையைக்கட்டுவதால் வேப்பந்தட்டை வடடார விவசாயிகள் பயனடைவதோடு பெரம்பலூர் நகர பகுதியில் வாழும் மக்களின் குடிநீர் தேவையும்பூர்த்தி செய்யப்படும் இவ்வாறு தெரிவித்தார்.

  இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் டி.என்.பிரபாகரன் மற்றும் சின்னாறு பாசன உதவிப் பொறியாளர் ஆர்.நல்லுசாமி மற்றும் முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயலட்சுமிகனகராஐ;, கிராம பொதுமக்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து