முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வு சரியானதே - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஓசூர் : பஸ் கட்டண உயர்வுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த நடவடிக்கை சரியானதே என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முன்தினம் முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 66 சதவீத கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். தமிழக அரசை கண்டித்து ஜனவரி 24-ஆம் தேதி போராட்டம் நடத்த போவதாக தமிழிசை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேருந்து கட்டண உயர்வு சரியானதே. போக்குவரத்து துறை நலிவடைந்துள்ளது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் காவிரி பிரச்சினை தீர்க்கப்படும் என்றார் அவர். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழிசை கோரும் நிலையில் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து