முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்து இவ்வாறு கூறினார்.

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் உள்ளாட்சி தேர்தலை சென்ற வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதற்கான பணிகள் நடக்கிறது என்றும்  கூறியுள்ளார். அவர் தனது பேட்டியில் உள்ளாட்சி தேர்தலுக்கான அடிப்படை பணிகள் நடந்து வருகிறது. பணிகள் மிகவும் துரிதமாக முடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து பணிகளும் முடிந்த பின் தேர்தல் நடைபெறும் என்று குறிப்பிட்டார். உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் நியமனம் ஏற்கனவே மூன்று முறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

துணை முதல்வர் ஓ.பி.எஸ் விளக்கம்

ஆம்னி பேருந்துகளில்  வசூலிக்கப்படும் கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் தமிழக அரசு பேருந்துகளில் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணங்களை மாநில அரசு உயர்த்தி உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வு நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தது. எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கட்டண உயர்வு என்று அரசு அறிவித்துள்ளது .மேலும் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவே வேறுவழியின்றி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும், எனவே மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் இதுகுறுத்து கோவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ஆம்னி பேருந்து கட்டணத்தில் 4-இல் ஒரு பங்குதான் தமிழக அரசு பேருந்துகளின் கட்டணமாக  உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவுதான் என்றார் .மேலும்  டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துணைமுதல்வர் ஒ.பன்னீர்செல்வம் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து