முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : இந்திய குடியரசு தின விழா, சுதந்திர தின விழாக்களில் தாக்குதல் நடத்துவதற்கு ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முயற்சித்து வருகிறார்கள். அதை இந்திய அரசும் முறியடித்து வருகிறது.

தற்போது வரும் குடியரசு தின விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவது சம்பந்தமாக அவர்கள் ஆலோசித்ததாக இந்திய உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குடியரசு தின விழாவில் தாக்குதல் நடத்தலாம் என்று இந்திய உளவுத்துறை கருதுகிறது. இது சம்பந்தமாக உளவுத்துறை அமைப்புகள் மத்திய உளவுத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளது.

இதை தொடர்ந்து மத்திய உள்துறை அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை தகவல் அனுப்பி இருக்கிறது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் மிகவும் உஷாராக இருக்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து