முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் அரசியல் வன்முறைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் - குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் தொடரும் அரசியல் வன்முறைச் சம்பவங்களுக்கு மாநிலத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மத்தியில் ஆளும் பா.ஜ.கவும் தான் காரணம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எல்லையில் தொடரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு போதிய ஆர்வமின்றி இருக்கிறது. - குலாம்நபி ஆசாத்

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மாநிலத்தில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு பா.ஜ.கவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சம பங்கு உள்ளது. தொடரும் சம்பவங்களுக்கு அவ்விரு கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். முத்தலாக் தடை மசோதாவை தற்போதைய வடிவில் சட்டமாக்கினால், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமே பாதிப்புக்குள்ளாகும். முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருக்கு எதிராகப் புகார் கொடுத்தால், அவர்கள் மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும். எனினும், உடனடி முத்தலாக் நடைமுறை என்பதால் சட்டத்துக்கு எதிரானதாக இருப்பதால், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்கிறேன்.

மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானை ஒட்டியுள்ள பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எல்லையில் தொடரும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு போதிய ஆர்வமின்றி இருக்கிறது என்றார் அவர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து