முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

மும்பை : ஜியோ-பிலிம்பேர் விருது விழாவில் வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

63-வது ஜியோ-பிலிம்பேர் விருது விழா மும்பையில் நடைபெற்றது. இதில் 2017-ம் ஆண்டின் சிறந்த பாலிவுட் படங்கள், நடிகர், நடிகைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படத்துக்கான விருது இந்தி மீடியம் திரைப்படத்துக்கு கிடைத்தது. சிறந்த இயக்குநருக்கான விருது பரேலி கி பர்பி படத்தை இயக்கிய அஸ்வினி அய்யருக்கு வழங்கப்பட்டது. இந்தி மீடியம் படத்தில் சிறப்பாக நடித்த இர்பான் கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், தும்ஹாரி சுலு படத்தில் சிறப்பாக நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டன. இதேபோல பல்வேறு பிரிவுகளில் ஜியோ-பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து