முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா பிறந்த தினவிழாவை முன்னிட்டு வீடுதோறும் நலத்திட்ட உதவிகள்: நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு:

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-அம்மா அவர்களின் பிறந்த தினவிழாவை சிறப்பாக கொண்டாடிடும் வகையில் வீடுதோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளதாக திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம்,கள்ளிக்குடி மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம்,டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களின் கழக நிர்வாகிகள் மற்றும் கிளைக் கழக செயலாளர்களுடன் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.முதலில் திருமங்கலம் ஒன்றியம் சார்பில் கீழஉரப்பனூர் சிவனம்மாள் கோவிலில் திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல் அன்பழகன் தலைமையிலும், டி.கல்லுப்பட்டி ஒன்றியம் சார்பில் பேரையூர் முருகன் கோவில் வளாகத்தில் டி.கல்லுப்பட்டி ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமசாமி தலைமையிலும்,கள்ளிக்குடி ஒன்றியம் சார்பில் சிவரக்கோட்டையில் கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி மகாலிங்கம் தலைமையிலும் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சிகளில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:  புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு ஒரு தட்டிலே சாப்பிட்டு ஒரு வீட்டிலே உறங்கிய நம்மிடம் ஒரு பிரிவினை ஏற்பட்டதுடன் கருத்து வேறுபாடுகளும் உருவானது.அதையும் தாண்டி கட்சியும்,கொடியும், சின்னமும் எங்கிருக்கிறதோ  அங்கே தான் நாம் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம்.ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றும் வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைந்துள்ளது. எங்கள ;  சகோதரர்களுக்குள்ளே நிலைப்பாடு கருத்துவேறுபாடு இருக்கலாமே தவிர எங்களுடைய எதிரிகளிடத்தில் நாங்கள் சரணடைய மாட்டோம் என்கிற உறுதிப்பாட்டுடன் நம்மை நிலை நிறுத்தியிருக்கிறோம்.மதுரை மாவட்டத்தில் தற்போது உள்ள 10 தொகுதிகளில் உங்களுடைய ஆதரவால் திருமங்கலம் தொகுதியை முதல் தொகுதியாக என்னால் வழிநடத்த முடிகிறது.இன்னும் மூன்றரை ஆண்டுகள் அம்மாவின் அரசை செலுத்த வேண்டிய   பொறுப்பில் உள்ளோம்.அதற்கு வருகிற உள்ளாட்சி அல்லது நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும்  அல்லது தகுதி நீக்கம் செய்யப்பட்ட  18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலாக இருந்தாலும்  நாம் தேர்தலை எதிர்கொள்ள மக்களின் நம்பிக்கையை பெற்றிட வேண்டும்.அம்மா இருந்தபோது  பெற்ற வெற்றியை தற்போது நாம் பெற்றால் தான்  இந்த மூன்றரை ஆண்டுகள் அம்மாவின் அரசை கொண்டு செல்ல முடியும்.அம்மாவின் திருநாமத்தைச் சொல்லித்தான் நாம் வெற்றி பெற்றிட வேண்டும்.அதற்கு மக்களை தினம் தோறும் சந்தித்து தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி அவர்களின் நம்பிக்கையை பெற்றிட வேண்டும்.அம்மாவின் ஆசி இருக்கும் வரை எங்களது ஆட்சி இருக்கும் என்று கழக நிர்வாகிகள் மக்களிடம் சொல்ல வேண்டும்.அம்மாவின் ஆசி இருப்பதால் தான் கடந்த 11மாதங்களாக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டிருக் கிறோம்.வரும் தேர்தலில் பலமுனை போட்டி இருக்கும் அப்போது அம்மாவின் ஆசியுடன் தேர்தலில் நாம் வெற்றி பெறுவது நிச்சயம்.அதற்கு முன்னதாக  பிப்ரவரி மாதம் 24ம் தேதி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் நலத்திட்ட வழங்கப்படவுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் ஜெயராமன்,கழக சிறுபான்மை பிரிவு பொருளாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,அவைத்தலைவர் அன்னக்கொடி, துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கட்சி நிர்வாகிகள் செல்வம்,பழனிச்சாமி,சாமிநாதன், வக்கீல்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன், கபிகாசிமாயன்,கள்ளிக்குடி அழகர்,முன்னாள் துணைசேர்மன் கண்ணன்,பேருர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன், முன்னாள் கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் டாக்டர்.பாவடியான்,வக்கீல் பாஸ்கரன்,தர்மர்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,தங்கராஜ்,பிச்சமணி மற்றும் அனைத்து ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து