முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல் கலாம் நினைவிடத்தில் கட்சியின் பிரச்சாரத்தை தொடங்க கமலஹாசனுக்கு என்ன தகுதி உள்ளது? அர்ஜூன் சம்பத் கேள்வி

திங்கட்கிழமை, 22 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தனது கட்சியின் பிரச்சாரத்தைத் தொடங்கப் போவதாக கூற கமலஹாசனுக்கு என்ன தகுதி உள்ளது என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார்.
திண்டுக்கல்லில் இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த அர்ஜூன் சம்பத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.
தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள பஸ் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையையும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும். இதன்மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான விலைவாசி குறைய வாய்ப்புள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் ஆன்மீக அரசியலுக்கு நாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறி விட்டோம். நடிகர் கமலஹாசன் தனது அரசியல் பிரச்சார பயணத்தை அப்துல் கலாம் நினைவிடத்தில் இருந்து தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சியாளர். பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கினார். பல்வேறு எதிர்ப்புகள் வந்தபோதும், கூடங்குளம் அணு உலை, மீத்தேன் எரிவாயு போன்ற திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் கமலஹாசன் அப்போதெல்லாம் வாய் திறக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அப்துல் கலாம் உயிரோடு இருந்தபோது அவரை சந்தித்தது கூட இல்லை. தற்போது அப்துல் கலாம் நினைவிடத்தில் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கப்போவதாக கூறி தன்னை புனிதனாக காட்ட முயற்சிக்கிறார். இது அரசியல் அரங்கில் எடுபடாது.
இந்தியாவில் 3 மாநிலங்களில் பத்மாவத் படம் திரையிட பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து தடை செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தை நியாயப்படுத்தும் வகையில் டைரக்டரும், இயக்குனரும் பேசி வருகின்றனர். அதில் ராணி பத்மினியை தவறாக சித்தரித்துள்ளனர். முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கு எதிராக படம் வெளிவருவதாக சர்ச்சை கிளம்பும் போது அதனை அந்த சமூக மக்களுக்கு திரையிட்டு காட்டுவது வழக்கம். எனவே அதைப்போல தமிழகத்திலும் பத்மாவத் படத்தைத் திரையிடுவதற்கு முன்பாக இந்து அமைப்பினருக்கு காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து