முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமேசான் புது முயற்சியால் பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ரெடி பில்போட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.

அமேசான் கோ என்ற இந்த சூப்பர்மார்க்கெட்டின் சோதனை ஓட்டம் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் மேலே வைக்கப்பட்டிருக்கும் கேமரா வாடிக்கையாளரை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் வாங்கும் பொருட்கள் என்ன, திரும்ப வைக்கும் பொருட்கள் என்ன என்பதை பதிவு செய்துகொள்ளும்.

வாங்கிய பொருட்களுக்கான பில் விலை, வாடிக்கையாளர் கடையை விட்டுப் போகும்போது அவர்களின் கிரெடிட் கார்டிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். இதனால் பில் போட க்யூவில் நிற்க வேண்டியதில்லை.

ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் அமேசான் கோ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருள் என்ன என்பதை அடையாளம் கண்டு அதை பட்டியலில் சேர்க்கும். பொருளை திரும்ப வைத்துவிட்டால் பட்டியலிலிருந்தும் அந்தப் பெயர் நீங்கும்.

2016 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த சூப்பர்மார்கெட்டை அமேசான் பணியாளர்களை வைத்து சோதித்து வந்தனர். விரைவில் பொதுமக்களுக்கும் இது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரே மாதிரி உருவ அமைப்புடையவர்களை அடையாளம் காணுவதிலும், பொருட்களை வெவ்வேறு இடங்களில் குழந்தைகள் மாற்றி வைப்பதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து