முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ம.பி. கவர்னராக பதவியேற்றார் ஆனந்தி பென் படேல்

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

போபால், மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக ஆனந்தி பென் படேல் நேற்று பதவியேற்றார்.

மத்தியப் பிரதேச கவர்னராக இருந்த ராம் நரேஷ் யாதவின் பதவிக் காலம் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து குஜராத் கவர்னர் ஓ.பி.கோலியிடம், மத்தியப் பிரதேச கவர்னர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டது. 76 வயதாகும் ஆனந்தி பென் படேல், கடந்த 2014-ஆம் ஆண்டில் மோடி பிரதமராக பதவியேற்றதையடுத்து, குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த 2016-இல் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முன்னாள் முதல்வர் ஆனந்தி பென் படேல் நேற்று போபாலில் பதவியேற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து