முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 7 கைதிகளை விடுவிப்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கும் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 3 மாதத்தில் முடிவெடுத்து அறிவிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்கும்...

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்து அறிவித்தது. இந்த முடிவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 பேரை விடுதலை செய்ய விருப்பமா என்பது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அறிக்கை தாக்கல்....

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்துள்ள சுப்ரீம் கோர்ட், இவர்கள் விடுதலை தொடர்பாக பல்நோக்கு விசாரணை ஆணையம், சி.பி.ஐயின் மனுக்கள் குறித்து ஆலோசித்து, அரசியலமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து, மத்திய அரசு எடுக்கும் முடிவு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டைக் கேட்டு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தது. இதற்கு பதில் வரவில்லை. அந்த கடிதத்தையும் தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து