முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் உள்ள 8,500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் - பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நாடு முழுவதும் உள்ள 8,500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்படவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் வெளியாகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு ரயில்வே தனி பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் இணைத்து உள்ளது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி மாதம் 1ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் ரயில்வே துறையில் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேமிராக்கள் பொருத்த....

நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் சுமார் 395 ரயில் நிலையங்கள், 50 ரயில்களில் மட்டுமே கண்காணிப்பு கேமிராக்கள் செயல்பாட்டில் உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த ரயில்வே இலாகா முடிவு செய்துள்ளது. நடப்பு ஆண்டில் 11000 ரயில்கள் மற்றும் 8500 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்படுகிறது. ரயில்களில் ஒரு பெட்டியில் மட்டும் 8 கண்காணிப்பு கேமிரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 12 லட்சம் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்படும் என்றும் அனைத்து மெயில், எக்ஸ்பிரஸ், சொகுசு ரயில்களிலும், நவீன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிக அளவில் நிதி...

கடந்த ஆண்டு அதிக ரயில் விபத்துக்கள் நடந்ததால் அதனை கருத்தில் கொண்டு அதிக அளவிலான நிதியை ரயில்வே பாதுகாப்புக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த பணிகள் நிறைவேற்றப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து