முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 'இலவச பஸ் பாஸ்' தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : பள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பஸ் பாஸ் திட்டம் தொடரும் என்றும், அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கட்டண உயர்வுக்கு பின்...

இது குறித்து போக்குவரத்து துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மாணவர்களின் நலனைக் கருதி, தமிழக அரசு, அரசு மற்றும் தனியார் பள்ளி 10, +2 மாணவர்களுக்கும், அரசு கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பயண அட்டையை வழங்கி வருகிறது. மேலும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் பழைய பேருந்து கட்டண அடிப்படையில், 50 சதவீதம் மானியம் வழங்கி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் (அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள்) 100 சதவீத இலவச பயண சலுகையின் மூலம் 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.

ஐ.டி.ஐ மாணவர்களுக்கு...

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 சதவீத இலவச பயண சலுகையின் மூலம் முறையே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 2,13,810, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு 35,921, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ) கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு 28,348 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த சலுகை, பேருந்துக் கட்டணம் மாற்றியமைத்த பின்பும் தொடர்ந்து வழங்கப்படும்.

மானியமாக ரூ.540 கோடி..

தனியார் கல்லூரிகளில் கல்வி பயிலும் 3.21 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகையுடன் கூடிய பயண அட்டைகளை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இந்த சலுகையும், பழைய கட்டணத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து வழங்கப்படும். மேற்படி மாணாக்கர்களுக்கான பயண அட்டைகளை வழங்குவதற்கு ஆகும் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு 2017-18-ஆம் ஆண்டில் ரூ.540.99 கோடியினை அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

சாதாரண கட்ட பஸ்களாக...

இதைத்தவிர, பொதுமக்களுக்கு எழும் சிரமங்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏற்கனவே இருந்த சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளுடன், கூடுதலாக, 498 விரைவு மற்றும் சொகுசு பேருந்துகளை சாதாரண மற்றும் விரைவு கட்டண பேருந்துகளாக மாற்றியமைத்துள்ளது.”  இவ்வாறு போக்குவரத்து கழக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து