முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதும் கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம் - ‘ஹாட்ரிக்‘ தோல்வியை தவிர்க்குமா இந்திய அணி?

செவ்வாய்க்கிழமை, 23 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜோகன்ஸ்பர்க் : இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.கடைசி போட்டியில் வென்று ஒயிட்வாஷ் ஆகாமால் இந்திய அணி தவிர்குமா என்று ரசிகர்கள் மத்தியில் ஆவல் மேலோங்கியுள்ளது.

சுற்றுப்பயணம்....

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் கேப்டவுனில் நடந்த முதல் போட்டியில் 72 ரன் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடந்த 2-வது டெஸ்டில் 135 ரன் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

கடைசி டெஸ்ட்...

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. தொடரை இழந்துவிட்ட இந்திய அணி கடைசி டெஸ்டிலாவது வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தொடரை முழுமையாக (ஒயிட்வாஷ்) இழக்கும் நிலையில் இருந்து தப்புவது என்பது மிகவும் சவாலானது.

தடுமாற்றம்...

வெற்றி பெற முடியா விட்டால் ‘டிரா’ செய்ய கடுமையாக போராட வேண்டும். அதுவும் கடினமானதே. தென்ஆப்பிரிக்காவிடம் இந்தியா இதுவரை ஒயிட்வாஷ் ஆனது கிடையாது. இதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வீரர்கள் முழு முயற்சியுடன் ஆட வேண்டும். தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களில் கேப்டன் விராட்கோலியை தவிர எந்த ஒரு பேட்ஸ் மேனாலும் நிலைத்து ஆடமுடியவில்லை. பார்ட்னர்ஷிப் சரியாக இல்லாததால் தான் பேட்டிங் முழுமையாக சொதப்பிவிட்டது. பந்து வீச்சாளர்கள் கடந்த 2 டெஸ்டிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

ரகானே - புவனேஷ்...

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரோகித்சர்மா, இஷாந்த் சர்மா ஆகியோருக்கு பதிலாக ரகானே, புவனேஷ்வர்குமார் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டுபெலிசிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ ஆர்வத்துடன் உள்ளது.

சமபலத்துடன்...

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அந்த அணி சமபலத்துடன் இருக்கிறது. பேட்டிங்கில் டிவில்லியர்ஸ், கேப்டன் டுபெலிசிஸ், எல்கர், மர்கிராம் ஆகியோர் பந்துவீச்சில் பிலாண்டர், ரபடா, நிகிடி, மார்னே மார்கல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இன்றைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் 1 மற்றும் சோனி டென் 3 டெலிவிசனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து