முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      விருதுநகர்
Image Unavailable

  விருதுநகர்.-விருதுநகர் மாவட்டம் விருதுநகர் வட்டம் சூலக்கரை சிட்கோ வளாகத்தில் உள்ள சிறு, குறு தொழில் அதிபர்கள் சங்க கட்டிடத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தேசிய தொழில் முனைவோர் வாரத்தை முன்னிட்டு,  நடைபெற்ற ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர்  .சிவஞானம், துவக்கி வைத்து, தலைமையுரையாற்றினார்கள்.
இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே, கல்லூரி மாணவர்களிடையே தொழில் முனைவதில் முக்கியத்துவம் பற்றியும், தொழில் முனைவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் குறு, சிறு நடுத்தர தொழில் துறைகளின் திட்டங்களாகிய நீட்ஸ், யுஒய்இஜிபி, பிஎம்இஜிபி, பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  ஒருவருக்கு 20 வயதிலோ அல்லது 40 வயதிலோ வரலாம். ஆகையால் மாணவர்கள் கல்லூரி படிப்பிற்கு பின் தொழில் முனைவோர்களாக உருவாகுவதற்கான வாய்ப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
மேலும், தொழில் முனைவதற்கான வழிமுறைகளை முழுவதுமாக புரிந்து கொண்டு செயல்படவேண்டும். தொழில் முனைவதில் ஏதேனும் சந்தேகங்கள் எழும் பட்சத்தில் உரிய அரசு அலுவலர்களை நாடி உடனடி தீர்வு காண வேண்டும். மேலும்;, மாணவர்கள் உரிய பயிற்சிகள் பெற்று சிறந்து முறையில் தொழில்களை கற்றுக் கொண்டு அவர்களுக்கு தொழில்களுக்கான அங்கீகாரம் கிடைக்க பாடுபடவேண்டும்.   நிறுவனம் வளர்ச்சியடைய திட்டமிடல் என்பது மிகவும் முக்கியம்.  மேலும், வங்கிகளின் நோக்கம் கடன் வழங்குவது, எனவே தொழில் முனைவோர்கள் உரிய திட்டத்துடன் வங்கி மேலாளரை சந்தித்து கடன் பெற்று உரிய தவணைகளை காலம் தவறாது செலுத்த வேண்டும். வருங்காலத்தில் இளைஞர்கள் தொழில் முனைவோரவாக வருவதற்கு அரசின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தெரிவித்தார்கள்.
பின்னர், தொழில் குறித்தான ஓவிய போட்டி, கட்டுரை போட்டி மற்றும் வினாடிவினா போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நினைவுப்பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து