நான் நடிப்பது என் மகள் உள்பட என் குடும்பத்திலுள்ள பலருக்கு பிடிக்க வில்லை விஜய் ஜேசுதாஸ்

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      சினிமா
padai-veeran

பின்னணி பாடகர் ஜேசுதாஸ்சின் மகன் விஜய்ஜேசுதாஸ். பின்னணி பாடகரான இவர் மாரி படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தற்போது படைவீரன் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் அமிரிதா, பாரதிராஜா, 'கல்லூரி' அகில், ஜான்விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்தினத்தின் உதவியாளராக இருந்த தனா இயக்கி உள்ளார். படத்தில் நடித்திருந்தப்பது பற்றி விஜய் ஜேசுதாஸ் கூறியதாவது:-

இந்த படத்தில் மதுரை பகுதியில் இளைஞநாக நடித்திருக்கிறேன். இதற்காக மதுரை வட்டார வழக்கு மொழி பயிற்சி எடுத்து கொண்டு நடித்தேன். எனது மாமாவாக பாரதிராஜா நடித்துள்ளார். அவருடன் நடித்தது எனக்கு பெருமையாக உள்ளது. எனக்கு சின்ன வயதிலிருந்து நடிகனாக வர வேண்டும் என் ஆசை. அப்பாவுக்கு அவரை போலா நானும் இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை. ஆதனால் தான் நான் பாடகரானேன். மாரி படம் மூலம் நல்ல வாய்ப்பு கிடைத்ததும் நடிகன் ஆனேன். நான் நடிகன் ஆனது அப்பாவுக்கு பிடிக்கவில்லை. காரணம் நடித்தால் குரல் வளம் கெட்டு இசை ஞானம் போய்விடும் என்றுஅஞ்சினார். ஆனால் இன்றைக்கு பாடகர்கள் நடிக்க வருவதும், இயக்குனராகவும், நடந்து கொண்டிருக்கிறது. நான் வில்லனாக நடித்தேன் என்பதற்காகவே அப்பா மாரி படத்தை பார்க்கவில்லை.  நான் நடிப்பது என் மகள் உள்பட என் குடும்பத்திலுள்ள பலருக்கு பிடிக்கவில்லை. ஆனால் ஒரு வெற்றி அவர்கள் எல்லோர் மனதையும் மாற்றும் என நம்புகிறேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்துள்ள இயகுனர் தனாவுக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து