நாகப்பட்டினம் மாவட்டத்தில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 25 ஜனவரி 2018      நாகப்பட்டினம்
pro nagai

 

நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியில் 8-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேற்று 25.01.2018 துவக்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

கல்லூரி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்ட இந்த வாக்காளர் தின விழிப்புணர்வுப் பேரணி நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து தொடங்கி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரே~;குமார், " ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்" என்றவாறு தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை வாசிக்க, அவரைப் பின்தொடர்ந்து, மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கலெக்டர் பேச்சு

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, இந்திய அரசு 2011 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக அறிவித்து சிறப்பாக கொண்டாடிவருகிறது. இவ்வருடம் 8 -வது தேசிய வாக்காளர் தினமாகும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 1502 வாக்கு சாவடிகள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் முறையே 160.சீர்காழி(ஆண்:117107, பெண்: 119792, இதரர்:5), 161.மயிலாடுதுறை(ஆண்: 116707,பெண்: 117792, இதரர்: 12), 162.பூம்புகார்(ஆண்: 128551, பெண்: 129952 இதரர்: 3), 163.நாகப்பட்டினம்(ஆண்: 91087, பெண்: 95948 இதரர்: 6), 164.கீழ்வேளுர்(ஆண்: 82489,பெண்: 85058 இதரர்: 1),165.வேதாரண்யம்(ஆண்: 89556,பெண்: 92019, இதரர்: 2) என மொத்தம் 625497 ஆண்கள், 640561 பெண்கள், இதரர் 29 பேர் உட்பட 1266087 வாக்காளர்கள் உள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறப்பு சுருக்க திருத்தம் - 2018 இல் 9501 ஆண்கள் மற்றும் 10213 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 1 உட்பட மொத்தம் 19715 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 4668 ஆண்கள் மற்றும் 4858 பெண்கள் மற்றும் இதர வகுப்பினர் 8 உட்பட மொத்தம் 9534 வாக்காளர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் இணைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 15064 பேர் அதிகமாக உள்ளனர். மேலும் பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல்இ நீக்கம்இ திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்பித்தோ அல்லது றறற.நடநஉவழைளெ.n.பழஎ.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் முலம் விண்ணப்பித்தோ பயன் பெறலாம்" என மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் வ.முருகேசன், வருவாய் கோட்டாட்சியர் எம்.வேலுமணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பி.மதுமதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், நாகப்பட்டினம் வட்டாட்சியர் இராகவன், வட்டாட்சியர்(தேர்தல்)குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து