முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பம் கம்பம் எம்.எல்.ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

கம்பம்,-தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் முன்னாள் முதல்வர் அம்மா இரு சக்கர வாகன வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்பத்தை கம்பம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் வழங்கினார்.தமிழகத்தில் வேலைக்கு செல்லும் 18 வயது முதல் 40 வயதுக்கு ட்பட்ட பெண்களுக்கு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் மெகா திட்டமான அம்மா இரு சக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் வழங்குப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதன் படி கம்பம் நகராட்சிப் பகுதிகளில் உள்ள பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகன திட்டத்தில் மானியம் பெறுவதற்கான விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது.இந்நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன் கலந்து கொண்டு பெண்களுக்கு விண்ணப்பத்தை வழங்கினார்.இதில் கம்பம் நகராட்சி ஆணையாளர் சங்கரன்,நகராட்சி பொறியாளர் வரலட்சுமி சமுதாய அமைப்பாளர் ரஞ்சிதா மேலாளர் முனிராஜ், கணக்காளர் செழியன்,காசாளர் வாசு வருவாய் ஆய்வாளர் நாகராஜன்,சுகாதார அலுவலர் நாகராஜன்,நகர அவைத் தலைவர் காந்தி நகர துணைச் செயலாளர் அப்துல்ஆசிக்,சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார்,சட்டமன்ற அலுவலக மேலாளர் தினா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து