பத்ம விபூஷன் பெற்ற இளையராஜாவுக்கு வைரமுத்து எழுதிய வாழ்த்து கவிதை

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சினிமா
vairamuthu 2017 4 9

சென்னை, இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது பெறும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவிஞர் வைரமுத்து கவிதையால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது..

விருது பெற்ற இளையராஜாவுக்கு ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்துவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,


பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள். பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் - உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் - உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
- என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து