பத்மாவத் படத்தில் நடிக்க தீபிகா வாங்கிய சம்பளம் ரூ.12 கோடியாம் !

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சினிமா
Padmaavat 2018 01 25

மும்பை, பத்மாவத் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல்வேறு தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியிலும், சட்ட போராட்டங்களுக்கு இடையிலும் சிக்கிய பத்மாவத் படம் இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார்.

சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தீபிகா படுகோனே தலைக்கு பரிசுகள் அறிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்கிறார்.


பத்மாவத் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முந்தைய படங்களில் ரூ.10 கோடிசம்பளம் வாங்கி வந்த தீபிகா படுகோனே பத்மாவத் சரித்திர படம் என்பதாலும் அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருந்ததாலும் பெரிய தொகை பெற்று இருக்கிறார். வேறு எந்த இந்தி நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை என்கின்றனர். பிரியங்கா சோப்ராதான் ரூ.11 கோடி சம்பளம் வாங்கி இதுவரை முதல் இடத்தில் இருந்தார். பத்மாவத் படம் அதிக பட்ஜெட்டில் தயாரானதால் ரூ.160 கோடிக்கு காப்பீடும் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து