பத்ம விபூஷண் விருது அறிவித்திருப்பது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை: இளையராஜா

வெள்ளிக்கிழமை, 26 ஜனவரி 2018      சினிமா
ilayaraja 2017 5 14

சென்னை, மத்திய அரசு பத்ம விபூஷண் விருது அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை என்று இளையராஜா கூறியிருக்கிறார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டள்ளது. நடிகர்கள் ரஜினி, கமல், விஷால் உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விருது பெறுவது பெற்றி இளையராஜா கூறும் போது,

பத்ம விபூஷண் விருது பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மத்திய அரசு என்னை கவுரவித்ததாக கருதவில்லை என்றும் தமிழகத்தையும், தமிழ் மக்களையும் கவுரவித்ததாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து