முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

6 சர்வதேச தீவிரவாதிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க்கை சேர்ந்த சர்வதேச தீவிரவாதிகள் 6 பேருக்கு எதிராக, அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது. தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கி அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் முயன்று வருகின்றனர். இந்தியாவும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வருகிறது.
அங்குள்ள அமெரிக்க வீரர்கள், பிரஜைகள் மீது தலிபான் மற்றும் ஹக்கானி நெட்வொர்க்கை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்று வருகின்றனர்.

அத்துடன் அமெரிக்கர்கள் உட்பட வெளிநாட்டினரைக் கடத்தி மிரட்டுகின்றனர். இதை தடுக்க பாகிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்க கூடாது, அவர்களுடைய நிதி ஆதாரங்களைத் தடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக எச்சரித்தார். அதற்கு சரியான பலன் கிடைக்கவில்லை என்று ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டி, பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி ரூ.1600 கோடியை நிறுத்தி விட்டார்.

இந்நிலையில், சர்வதேச தீவிரவாதிகள் என்று அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட தலிபான் தீவிரவாதிகள் அப்துல் சமத் சனி, அப்துல் காதிர் பஷீர் அப்துல் பஷீர், ஹபீஸ் முகமது போபல்ஸாய், மவுலாவி இனயத்துல்லா மற்றும் ஹக்கானி நெட்வொர்க்கை சேர்ந்த தீவிரவாதிகள் பகீர் முகமது, குலா கான் ஹமிதி ஆகியோருக்கு எதிராக அமெரிக்கா நேற்று பொருளாதார தடை விதித்தது.

இதையடுத்து இந்த 6 பேரின் சொத்துக்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடங்களில் முடக்கப்படும். அமெரிக்கர்கள் யாரும் இவர்களுடன் எந்த பண பரிவர்த்தனையும் வைத்து கொள்ளக் கூடாது என்று அமெரிக்க மூத்த அதிகாரி சிகால் மண்டல்கர் உறுதிப்படுத்தினார்.

மேலும், தீவிரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்க கூடாது, அவர்களுக்கு நிதி வரும் வழிகளை முடக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானை மீண்டும் எச்சரித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து