முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிப்ரவரி 8-ல் வடகொரியா பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த முடிவு

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: பிப்ரவரி 8-ம் தேதி வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினம் கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமி ட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு, ஏவுகணை சோதனை நடத்தி வருவதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க வடகொரியா முடிவு செய்துள்ளது. குறிப்பாக தொடக்கவிழாவின்போது ஓரே கொடியின் கீழ் இணைந்து அணிவகுப்பு நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் போர் பதற்றம் தணிந்துள்ளது.

இந்நிலையில், தொடக்க விழாவுக்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 8-ம் தேதி வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினம் வருகிறது. இதையொட்டி பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாகவும் அதற் கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வடகொரியாவில் அதன் நிறுவனர் கிம் 2-சங் கொரில்லா படையை உருவாக்கியதன் நினைவாக ஏப்ரல் 25-ம் தேதி இதுபோன்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வந்தது. இதுவரை பிப்ரவரி 8-ம் தேதிக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு அந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப் பாக ஒலிம்பிக் தொடங்க உள்ள நாளுக்கு முந்தைய நாளில் இதுபோன்ற அணுவகுப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து