முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசா லாட்டரிக்கு முடிவு கட்டப் போகும் டிரம்ப் இந்திய ஐடி ஊழியர்களுக்கு சாதகம்

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அதி திறன் வாய்ந்த ஐ.டி ஊழியர்களுக்கு கிரீன் கார்டு வழங்குவதில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக விசா லாட்டரி முறைக்கு மூடுவிழா காண அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இதனால் பல ஆண்டுகளாக கிரீன் கார்டு கிடைக்காமல் காத்திருப்பு பட்டியலில் இருக்கும் இந்திய ஐ.டி ஊழியர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. மிகவும்திறம் வாய்ந்த வெளிநாட்டவர்களை அமெரிக்காவில் பணியில் அமர்த்துவதற்காக ஹெச்1பி விசா நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதன்படி தற்போது ஆண்டுதோறும் சுமார் 85 ஆயிரம் பேர் விசா லாட்டரி முறையில் ஹெச்1பி விசா பெறுகின்றனர். இந்த விசா லாட்டரி முறையை முடிவுக்கு கொண்டு வர அதிபர் டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஒருவேளை இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக கொண்டு வரப்பட்டால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும் ஊழியர்களுக்க அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கிரீன் கார்டு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய ஐடி ஊழியர்கள் கிரீன் கார்டுக்காக காத்திருக்கின்றனர். டிரம்ப் நிர்வாகம் விசா லாட்டரியை முடிவுக்கு கொண்டு வந்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் கிரீன் கார்டு பெற முடியும். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க குடிமகனாக முடியும். மேலும் அண்மையில் நியூயார்க்கை மையமாக கொண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் டைவர்சிட்டி விசா முறையில் தான் அமெரிக்காவில் நுழைந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தங்கி இருக்கும் இந்திய ஐடி ஊழியர்கள் தற்போதைய விதிகளால் கிரீன் கார்டு பெற முடியாமல் காத்திருத்திக்கின்றனர். லாட்டரி விசா முறையை மாற்றியமைப்பதன் மூலமாக காத்திருப்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இந்தியர்களுக்கு லாபம் ஏற்படும் என்று தெரிகிறது. அமெரிக்காவில் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வருவதால் 18 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்த டைவர்சிட்டி விசா வழங்கப்படுவதில்லை. எனினும் ஹெச் 1 பி விசா லாட்டரி முறையை ஒழிப்பதன் மூலம் புதிதாக பணிக்கு செல்வோருக்கான வாய்ப்பு மறுக்கப்படும் என்பதும் இதில் உள்ள தந்திரமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து